பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவரா?

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொடங்க இப்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

புது உற்சாகத்தில் போட்டியாளர்கள்:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்ததும் போட்டியாளர்களே புது உற்சாகம் அடைந்துள்ளனர். நிகழ்ச்சியிலும் போட்டிகள் எல்லாம் வித்தியாசமாக கொடுக்க போட்டியாளர்கள் கடுமையாக போட்டிபோட்டு வருகிறார்கள்.

இந்த வார எலிமினேஷன்:

சிம்பு நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய முதல் வாரத்தில் மட்டும் எலிமினேஷன் இல்லை, அதற்கு அடுத்த நிகழ்ச்சியில் இருந்தது. இந்த வாரம் எலிமினேஷனுக்காக ஜுலி, பாலா, சினேகன், ஸ்ருதி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதில் ஸ்ருதி மற்றும் சினேகன் குறைவான வாக்குகள் பெற்று இருக்கிறார்களாம். எனவே இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment