தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தையில் காளையின் வெற்றி பயணம்…சென்செக்ஸ் 817 புள்ளிகள் உயர்ந்தது…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 817 புள்ளிகள் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பஞ்சாபை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் களைகட்டியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் டெக் மகிந்திரா மற்றும் டாக்டர்ரெட்டீஸ் உள்பட மொத்தம் 3 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,439 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 924 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 97 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.45 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 817.06 புள்ளிகள் உயர்ந்து 55,464.39 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 249.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,594.90 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment