அவரால் தான் இங்கே நிற்கிறேன்… மறைந்த ஷேன் வார்னேவை பற்றி மனம் உருகிய ஜடேஜா

by Column Editor

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்கு காரணமாக அமைந்த ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இதனிடையே, ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், கேக் வெட்டியும் வீரர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில், ஆட்டநாயகன் பெருமையை சமீபத்தில் மாரடைப்பால் திடீரென இயற்கை எய்திய ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

மேலும், கிரிக்கெட்டில் இந்த அளவுக்கு தாம் வளர்வதற்கு அவர் தான் மிக முக்கிய காரணம் என அவருக்கு ரவிந்திர ஜடேஜா புகழாரம் சூட்டினார். இதுபற்றி ஜட்டு தெரிவிக்கையில், “அவர் இறந்த செய்தியை கேட்டதுமே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அப்போது சோகமடைந்த நான் எனது உணர்ச்சிகளால் நிலைகுலைந்துபோனேன். அந்த செய்தி உண்மை என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவரை முதல் முறையாக கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பார்த்தபோது அவர் ஜாம்பவனாக இருந்தார்.

அவரைப் போன்ற ஒரு மகத்தான ஜாம்பவானுடன் விளையாடுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என தெரிவித்தார்.

அவர் கூறியது போலவே ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானில் கேப்டனாக இருந்த வார்னே சாம்பியன் பட்டத்தை 2008-ம் ஆண்டு வாங்கி கொடுத்தார்.

அந்த ஐபிஎல் தொடரில் அப்போது இளம் வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிகப்படியான ஆதரவும் வாய்ப்புகளையும் கொடுத்த ஷேன் வார்னே அவர் தடுமாறிய ஆரம்ப காலகட்டங்களில் நிறைய ஊக்கமளித்தார்.

Related Posts

Leave a Comment