ரஷ்யாவை கண்டு உலக நாடுகள் ஏன் பயப்படுகின்றன தெரியுமா? காரணம் இது தான்!

by Lifestyle Editor

உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்து வைத்துள்ளது. பல மாத அச்சுறுத்தல்களுக்கு பிறகு, உக்ரைன் மீது படையெடுக்கும் முயற்சியாக கடந்த 10 நாட்களாக ராணுவ தாக்குதலை ரஷ்யா தொடங்கியதை ஐக்கிய நாடுகள் சபை, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அனைத்து முக்கிய உலகளாவிய செல்வாக்கு பெற்ற அமைப்புகளும் அமைதியாக வேடிக்கை பார்த்தன.

இந்த தாக்குதல் துவங்கிய நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்க முடியாத அழிவுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி நம் தூக்கத்தை கெடுத்து வருகின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனின் Zaporizhzia அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த தாக்குதல் மீளமுடியாத அணுசக்தி நெருக்கடியை ஏற்படுத்தவில்லை என்றாலும் உலக வல்லரசு நாடுகளை திகைக்க வைத்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டணி நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தாலும், ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் கூட எப்போதும் ரஷ்யாவை ஒரு அச்சத்துடன் தான் பார்த்து வருகின்றன. இப்போது நம் எல்லோர் மனதிலும் எழும் ஒரே கேள்வி உலகம் ஏன் ரஷ்யாவைக் கண்டு பயப்படுகிறது.?

இதற்கான ஒரே பதில் விளாடிமிர் புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள். எல்லாவற்றையும் விட மிக அச்சுறுத்தலாக இருப்பது அணு ஆயுதத் தாக்குதல் தான். கடந்த பிப்ரவரி 27 அன்று புடின் தனது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத்தின் பொது ஊழியர்களின் தலைவருக்கு அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்கு செய்யுமாறு உத்தரவிட்டது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு உலக நாடுகளின் பதில்:

ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இது ஒரு அச்சுறுத்தலான வளர்ச்சி உடனடியாக ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தினார். ரஷ்யா தனது அணுசக்திப் படைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்ததை அடுத்து, வரும் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக, மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் திட்டமிடப்பட்ட சோதனை ஏவுதலை அமெரிக்க ராணுவம் ஒத்திவைத்தது. அதே போல ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களிடமிருந்து தனது வான்வெளியை பாதுகாக்க உதவும் உக்ரைனின் வேண்டுகோளை நேட்டோ நிராகரித்தது.

பழைய அச்சுறுத்தல்:

புடின் ஏற்கனவே க்ரீமியா விஷயத்திலும் இதேபோன்ற அணுசக்தி அச்சுறுத்தல் தந்திரத்தை பின்பற்றினார். க்ரீமியா இணைக்கப்பட்ட நேரத்தில் ரஷ்ய அதிகாரிகள் அணுசக்தி அச்சுறுத்தல்களை வெளியிட்டனர். இது அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் பழிவாங்கும் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஷ்யா அணு ஆயுதங்களை சார்ந்திருப்பது புதிதல்ல. பனிப்போருக்குப் பிந்தைய குறிப்பாக 2000-ஆம் ஆண்டிலிருந்து அதன் ராணுவக் கோட்பாடுகளில் தெளிவாகப் பிரதிபலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment