மகளிர் உலக கோப்பை போட்டி – பாகிஸ்தானுக்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

by Lifestyle Editor

மகளிர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் உலக கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. சர்வதேச போட்டிகளில் இதுவரை இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 10 ஆட்டங்களிலுமே இந்தியாவே வென்றுள்ளது.

இந்நிலையில்,மவுண்ட் மவுங்கானுய் பகுதியிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்றி இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வெர்மா ஆகியோர் களமிறங்கினர். ஷபாலி வெர்மா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய தீப்தி ஷர்மா, ஸ்மிருதி மந்தனாவுடன் சேர்ந்து சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தினார். இந்த கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. தீப்தி ஷர்மா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போல்டு ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார். 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரும் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் மித்தாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவூர், ரிச்சா கோஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்த நிலையில், ஸ்னே ரானா, பூஜா வஷ்ட்ரேகர் உள்ளிட்டோர் அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

இருவருமே அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பூஜா வஷ்ட்ரேகர் 67 ரன்களில் அவுட்டாகினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. ஸ்னே ரானா 53 ரன்களுடனும், ஜுலான் கோஸ்வாமி 8 ரன்களுடனும் கடைசி வரையில் அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளத்து.

Related Posts

Leave a Comment