உங்களுக்கு புரியவில்லையா ?… வேற லெவல் என அனிதாவை கலாய்க்கும் ஜூலி !

by Column Editor

அனிதா சம்பத்தை கலாய்க்கும் ஜூலியின் காரசாரமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் ஹவுஸ்மேட்டுகள் விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க் விளையாடும் போது ஹவுஸ்மேட்டுகளுடன் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த வகையில் அனிதா மற்றும் அபிராமி இடையே ஏற்படும் பிரச்சனை குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசும் காட்சிகள் மூன்றாவது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து 4வது ப்ரோமோவில், பொய்யாக நடிக்காதீர்கள். முகத்தை நேராக பிடிக்கல என்று சொல்லிவிடுங்கள். விமன் கார்டு தூக்கிட்டு வராதீங்க. விமன் பத்தி பேசினேன். கமல் சார் என்னை பாராட்டினார் என்று சிம்புவிடம் அனிதா சம்பத்தை சொன்னதை குத்துக் காட்டி ஜூலி பேசுகிறார். அதற்கு அனிதா நான் நடந்ததை மட்டுமே சொன்னேன் என்கிறார்.

இப்போது அதை அசிங்கப்படுத்தவேண்டுமா என அனிதா கேட்க, அந்த விஷயத்தை அப்போதே சொல்லியிருக்கலாம் என்று ஜூலி கேட்கிறார். நீ என்னை சொல்கிறாய் என்று எனக்கு நிஜமாக புரியவில்லை என்று அனிதா மீண்டும் கேட்க, அதற்கு உங்களுக்கு புரியலா, உங்களுக்கு புரியலா என்று சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி ஜூலி நக்கலடித்து வேற லெவல் என்று சொல்லும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment