ஆண்களின் சருமத்தை பாதிக்கும் விஷயங்களும், அதை தவிர்ப்பதற்கான ஸ்கின் கேர் டிப்ஸும்!

by Column Editor

மாசு மற்றும் ஆயில் லீக்கேஜை எதிர்த்துப் போராடுவதற்கான மிகவும் தேவையான ஒன்று – க்ளென்ஸிங். தினமும் உங்கள் முகத்தை ஒரு க்ளென்சர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

‘ஸ்கின் கேர்’ என்று வரும்போது, ​​​​பெரும்பாலான ஆண்கள் எதையெல்லாம் மிகவும் எளிமையாக செய்ய முடியுமோ அதை மட்டுமே நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள். மறுபுறம் உள்ள ‘சில’ ஆண்கள் எதைக் காட்டிலும் ஸ்கின் கேருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்களாக உள்ளனர்.

இதில் நீங்கள் எந்த வகையை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, உங்கள் சருமம் எந்த வகையாக – ஆய்லி, ட்ரை, நார்மல், சென்சிடிவ் அல்லது காம்பினேஷசன் – இருந்தாலும் சரி, கீழ்வரும் எளிய ஸ்கின் கேர் பழக்கங்களை நீங்கள் பின்பற்றுகிறீர்களா என்பதை சரிபார்த்து கொள்ளவும். ஏனெனில் இவைகள் ‘லாங் டேர்ம் ரிஸல்ட்’களை வழங்குவதற்கு பெயர் போனவைகள்!

க்ளென்ஸிங்:

மாசு மற்றும் ஆயில் லீக்கேஜை எதிர்த்துப் போராடுவதற்கான மிகவும் தேவையான ஒன்று – க்ளென்ஸிங். தினமும் உங்கள் முகத்தை ஒரு க்ளென்சர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும், காலை பொழுதில் நீங்கள் செய்யும் முக்கியமான வேலைகளில் இதுவும் ஒன்றாக மாற வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை, அதாவது காலை மற்றும் இரவு என இரண்டு முறை முகத்தை க்ளென்சர் கொண்டு கழுவினால், அசுத்தங்கள் நீங்கும். உங்கள் தோல் வகைக்கு ஏற்றவாறு சரியான க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பதும் இங்கே அவசியம். இது முகப்பருக்கள் வரமால் தடுக்கவும் உதவும்.

ஹைட்ரேஷன்:

காற்று மாசுபாடு, சிகரெட் புகை மற்றும் புற ஊதா கதிர்கள் ஆகியவற்றில் காணப்படும் இரசாயனங்கள். காலப்போக்கில் ஆண்களின் சருமத்தை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன. இந்த இடத்தில் தான் நீங்கள் உங்கள் சருமத்தை ‘ஹைட்ரேட்’ செய்வது மிகவும் அவசியம் ஆகிறது. மாய்ஸ்சரைசருக்கு முன் ஆக்டிவ் இன்கிரிடியன்ட்ஸ் உள்ள சீரம்-ஐ பயன்படுத்துவது உங்கள் சருமத்தை மேற்கண்ட பாதிப்புகளில் இருந்து சீர் செய்ய உதவும்.

பாதுகாப்பது:

சரும பராமரிப்பு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதை பாதுகாப்பதும் முக்கியமே! தினமும் காலையில் வெளியில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். இது உங்களின் ஸ்கின் கேருக்கான முக்கியமான மற்றும் இறுதிப் படியாகும். நான்-ஸ்டிக்கி ஜெல்-பேஸ்டு சன்ஸ்கிரீன்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது.

இந்த இடத்தில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வெளியில் செல்லாவிட்டாலும் கூட, வீட்டுக்குள்ளயே இருந்தாலும் கூட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இது வீட்டில் உள்ள கதவு அல்லது ஜன்னல் ஸ்க்ரீன்களின் வழியாக வெளிப்படும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் ஒருவேளை நீங்கள் தொடர்ந்து சூரிய ஒளியின் கீழ் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒருமுறை சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் தொடர்ச்சியாக மாசு, புகை மற்றும் பலவற்றுக்கு ஆளானால், உங்கள் சரும பாதுகாப்பிற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் சீரம் அல்லது பிக்மென்டேஷன் சீரம்-ஐயும் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் சீரமின் கன்சிஸ்டென்சியைப் பொறுத்து அதை ஹைட்ரேட் செய்வதற்கு முன் அல்லது பின் பயன்படுத்தலாம்.

மேலும் ஆண்கள் ஒரு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நான்-ஸ்டிக்கி, நான்-காமெடோஜெனிக் (non-comedogenic) மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக எப்பொழுதும் உங்கள் சரும வகையை அறிந்து அதற்கேற்ப பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். அதாவது உங்களின் ஸ்கின் கேருக்கு மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றலாம் ஆனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ப தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

Related Posts

Leave a Comment