சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும், இளமையுடனும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஈரப்பதம் கட்டாயம் தேவை.
ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது. ஆனால் அப்படிப்பட்ட சருமம் அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அதனால் நீங்கள் பளபளப்பாக இருக்க முடியாதா? என்றால் நிச்சயம் கிடையாது. ஜொலி, ஜொலிக்கும் சருமத்தை பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா எபெக்ட் போட்டா மட்டும் போதும்.
சரும அழகு மற்றும் ஆரோக்கியத்தை கூட்ட நம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல டிப்ஸ்கள் உள்ளன. தினமும் பிசியாக ஓடிக்கொண்டிருப்பதை கொஞ்சம் நேரம் நிறுத்திவைத்துவிட்டு, நாங்கள் சொல்லும் இந்த ஸ்கின் கேர் டிப்ஸ்களை மட்டும் ட்ரை பண்ணிப்பாருங்க, உங்கள் சருமம் பளபளப்பாக மாறும் மேஜிக்கை நீங்கள் உணரலாம்.
1. மாய்ஸ்சரைசருடன், ஃபேஸ் ஆயிலை கலக்குங்கள்:
சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும், இளமையுடனும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஈரப்பதம் கட்டாயம் தேவை. அனைத்து வகை சருமத்திற்கும் ஈரப்பதம் அளிக்க, அதற்கு பொருத்தமான மாய்ஸ்சரைசர்கள் கிடைக்கின்றன. சிலர் மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.உங்களுடைய சருமம் வெளியில் இருந்து பிரகாசிக்க வேண்டும் என்றால் ஆழமான ஊட்டச்சத்து தேவை. அதற்கு உங்களுடைய மாய்ஸ்சரைசர் உடன் ஃபேஷியல் ஆயிலையும் கலந்து பயன்படுத்தினால் சருமத்திற்கு டபுள் மடங்கு பலன் கிடைக்கும்.
2. ஈரப்பதமூட்டும் டோனர்கள்/மிஸ்ட்:
மாய்ஸ்சரைசர், கிளென்சர், ஃபவுண்டேஷன் க்ரீம்கள் பற்றி அறிந்துள்ள அளவிற்கு டோனர்கள் பற்றி பலரும் அறிந்திருப்பது இல்லை. டோனர்கள் சருமத்திற்கான பாதுகாவலனாக செயல்படுகிறது. இதனை பயன்படுத்துவதன் மூலமாக முகத்துக்கு தேவையான ஊட்டசத்துகளும், நீர்ச்சத்தும் கிடைக்கிறது.சரும பராமரிப்பில் டோனிங் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தில் உள்ள தூசு மற்றும் அழுக்கை அகற்றுவதோடு, அதனை ஈரப்பதத்துடனும் பாதுக்காக உதவுகிறது. சருமத்திற்கான ஆபத்தான ரசாயனங்களுக்கு பயந்து டோனர்களை பயன்படுத்துவதை தவிர்க்காமல், வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமான டோனர்களை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்.
3. சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள் :
வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது மட்டுமே சன் ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. என்னநேரம், பருவம், எந்த இடமாக இருந்தாலும் மாய்ஸ்சரைசர் மீது சன் ஸ்கீரின்களை போட்டுக்கொள்வது சரும பராமரிப்பை மேம்படுத்த உதவும்.முடிந்தவரை வெயிலில் இருந்து விலகி இருக்கலாம், தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியே செல்ல நேர்ந்தால் சருமத்தை வெயிலில் படாமல் மறைத்துக்கொள்வது நல்லது. அதேபோல் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒருமுறை மீண்டும் சன்ஸ்கிரீனைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
4. எக்ஸ்ஃபோலியேட்டிங் செய்யுங்கள் :
சருமத்தின் துளைகளில் சேரும் அழுக்கு, தூசு ஆகியவற்றால் முக்கப்பரு போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, சரும துளைகளை இறுக்கமாக்க எக்ஸ்ஃபோலியேட்டிங் பயன்படுகிறது. வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் சருமத்துளைகள் சுத்தம் செய்யலாம். இது சருமத்திற்கு வெளிப்புறம் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதுப்பொலிவுடன் ஜொலி ஜொலிக்க உதவுகிறது.இவற்றை எல்லாம் விட ஆரோக்கியமான உணவு பழக்கம், அதிகமாக தண்ணீர் குடிப்பது, சரியான அளவு தூக்கம் ஆகியவையும் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் தரமான சரும பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்துவதும், சருமத்திற்கு அலர்ஜி தரக்கூடிய அழகு சாதன பொருட்களை உடனடியாக தவிர்ப்பது ஆகியவையும் சரும பராமரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.