தயிர் சட்னி

by Column Editor

நம்மில் பலர் விதவிதமான மெயின் டிஷ் இருந்தாலும் வித்தியாசமான சைடிஷ்ஷை விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தயிர் சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

தயிர் – கால் லிட்டர்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
வரமிளகாய் – 4
பூண்டு – 20 பல்
உப்பு – தேவையான அளவு
வரமிளகாய் தூள் – 4 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கால் லிட்டர் தயிரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் வரமிளகாய் தூள் 2 ஸ்பூன், கரம்மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதக்கிய பிறகு அதில் கலந்து வைத்த தயிர் கலவையை ஊற்றி கிளறவும்.

அதனுடன் மீதி இருக்கும் 2 ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

10 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து, அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.

சூப்பரான தயிர் சட்னி ரெடி.

Related Posts

Leave a Comment