தொழிற்கட்சி தலைவரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்த சம்பவம்: இருவர் கைது!

by Column Editor

தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரை நாடாளுமன்றத்திற்கு அருகில் சுற்றி வளைத்த போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்க பொலிஸார் உதவி செய்ததை அடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர், பொலிஸ் அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டு, காரில் அப்பகுதியை விட்டு வெளியேறினார்.

திங்கட்கிழமை மதியம் நடந்த சம்பவம் பற்றி தொழிற்கட்சி கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், பொது வழக்குகளின் முன்னாள் இயக்குநரான சர் கெய்ர் பாதுகாப்பாக தனது அலுவலகத்திற்குத் திரும்பினார். மேலும் சம்பவத்தின் போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்த சம்பவம் முற்றிலும் அவமானகரமானது எனக் கூறி இந்த நடத்தையை கண்டித்துள்ளார் மற்றும் விரைவாக பதிலளித்ததற்காக பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

‘தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை துன்புறுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பாளர்கள் ‘துரோகி’ என்று மீண்டும் மீண்டும் கூச்சலிடுவதைக் வெளியான காணொளியில் கேட்கலாம், அதே நேரத்தில் தொழிலாளர் கட்சி தலைவர், கொவிட் தடுப்பூசிகளை ஆதரிப்பதற்காக ‘அரசாங்கத்தை எதிர்க்கவில்லை’ என்று விமர்சிக்கிறார்.

சில எதிர்ப்பாளர்கள் கொவிட் பரவுவதைத் தடுக்க கட்டாய தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் பலகைகளை வைத்திருப்பதைக் காண முடிந்தது.

Related Posts

Leave a Comment