இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை சமாளிப்பதற்கான திட்டம் தாமதம்!

by Column Editor

இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் நோயாளிகள் காத்திருப்பதைத் சமாளிக்கும் திட்டம், தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை திட்டத்தின் விபரங்கள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வைட்ஹாலின் கடைசி நிமிட தலையீட்டின் அறிக்கைகளுக்குப் பிறகு அது இடைநிறுத்தப்பட்டது.

இருப்பினும், அவசரமற்ற அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் காத்திருக்கும் நேரம் குறித்த தகவல்களைப் பெற அனுமதிக்கும் புதிய ஒன்லைன் சேவையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

முழுமையான திட்டம் எப்போது வெளியிடப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நவம்பரில் இங்கிலாந்தில் ஆறு மில்லியன் நோயாளிகள் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர். தொற்றுநோய்களின் போது சில நேரங்களில் வழக்கமான அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது.

Related Posts

Leave a Comment