கோலாகலமாக தொடங்கும் பிக்பாஸ் அல்டிமேட்… போட்டியாளர்கள் இவர்கள்தான் !

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்டிமேட் இன்று கோலாகலமாய் தொடங்கவுள்ள நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியை போன்று தற்போது தமிழிலும் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று முதல் ஒளிப்பரப்பாக உள்ளது. டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் லைவ்வாக பார்க்க முடியும். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் இன்று மாலை 6.30 மணிக்கு விஜய் டிவி மற்றும் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, அனிதா சம்பத் ஆகியோர் பங்கேற்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுதவிர பாலாஜி முருகதாஸ், தாமரை, அபிநய், சுஜாவருணி ஆகியோரும் பங்கேற்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓவியா கலந்துக்கொள்ள இருந்தார். ஆனால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் விலகிவிட்டார். அதோடு நடிகர் புகழும் பங்கேற்பதாக ஒரு தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment