ஸ்மார்ட்போனில் வரும் விளம்பரங்களால் தொல்லையா? தடுக்க சூப்பர் ஐடியா இதோ

by Lifestyle Editor

இன்றைய டிஜிட்டல் உலகில், பெரும்பாலும் விளம்பரங்கள் ஒளிப்பரப்படுவதால் பயனாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்க்கொள்கிறார்கள்.

அதிலும், மொபைல் போன்களில் வரும் விளம்பரங்கள் தான் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது.

விளம்பரங்களை தடுக்க சில என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

உங்கள் போனில் முதலில் Settings ஐ திறக்கவும்.

அடுத்து ‘Apps & Notifications,’ என்பதற்குச் சென்று, ‘Advanced’ என்பதைத் கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் ”சிறப்பு பயன்பாட்டு அணுகல்” (Special App Access) என்பதைத் திறக்கவும்.

விளம்பரங்களைக் காட்ட அனுமதி உள்ள அனைத்து செயலிகளின் பட்டியலையும் காண்பீர்கள்.

அங்கே நீங்கள் சந்தேகிக்கும் அல்லது விளம்பரங்களை காட்டும் செயலிகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்யவும்.

ஒரு செயலியை தேர்வு செய்து உள்நுழைந்தவுடன் “Allow display over other apps” என்பதை அணைத்து (OFF) வைக்கவும்.
அவ்வளவுதான் இப்போது பெரிய விளம்பரங்களை உங்கள் போனில் தோன்றுவதை தடுக்க முடியும். ஆனால், ஆப்களில் தோன்றும் விளம்பரங்களை தடுக்க நீங்கள் அந்த ஆப்பில் permission-க்கு சென்று தேவையற்றதை ஆப் செய்து வைக்கவும்.

Related Posts

Leave a Comment