மீண்டும் செம கெத்தாக, மிரட்டலாக களமிறங்கும் வனிதா! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. அதில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று 50 லட்சத்தை தட்டி சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடியில் தொடங்கப்படவுள்ளது.

நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை உலக நாயகன் கமல் பிக்பாஸ் சீசன் 5 பினாலே மேடையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் தற்போது சினேகன், ஜூலி உள்ளிட்ட போட்டியாளர்களை தொடர்ந்து பிக்பாஸ் Ultimate வீட்டிற்குள் போகவுள்ள அடுத்த போட்டியாளரை அறிமுகப்படுத்தி ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் செம கெத்தாக, மிரட்டலாக வனிதா மீண்டும் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளதை உறுதி செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment