2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!

by Column Editor

கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம் செய்ததாகக் தரவுகள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டில், மொத்தம் 8,417 பேர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்தனர்.

கடந்த ஆண்டு சாதனை எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஏறக்குறைய 20,000 அதிகரிப்பு ஆகும்.

கடந்த ஆண்டு நவம்பரில், குறைந்த வெப்பநிலை இருந்தபோதிலும், குறைந்தபட்சம் 6,869பேர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளனர்.

அரசாங்கம் தனது அணுகுமுறையை சீர்திருத்தம் செய்து வருவதாகவும், கடுமையான புகலிட விதிகளை அறிமுகப்படுத்துவதாகவும் உட்துறை அலுவலக அமைச்சர் தெரிவித்தார்.

ஆபத்தான மற்றும் இரக்கமற்ற கொள்கை அதிக எண்ணிக்கையிலான வருகைகள் மற்றும் நீரில் மூழ்குவதற்கு வழிவகுக்கும் என்று அகதிகள் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

Related Posts

Leave a Comment