புது படத்தில் ஒப்பந்தமான பிக் பாஸ் அக்‌ஷரா.. ஹீரோ யார் தெரியுமா?

by Column Editor

நாயகனாக வருணும், நாயகியாக அக்ஷராவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஆனால், வருணின் தாய் மாமாவான ஐசரி கணேஷின் நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஷனல் இந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலருக்கும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வரிசையில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து ஒரே நாளில் வெளியேறிய அக்ஷரா மற்றும் வருண் இருவருக்கும் மிகப்பெரிய திரைப்படம் வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இருவருமே ஒன்றாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் போது, வருண் மற்றும் அக்ஷரா இருவருமே நல்ல நண்பர்களாக நல்ல புரிதலுடன் இருந்து வந்துள்ளனர். நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு டிராமா இல்லாமல், சண்டை இல்லாமல் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள் என்று இவர்களுடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் இவர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் இருவருக்குமே தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் உள்ளது. கடுமையான டாஸ்க்குகளை எளிதாக எதிர்கொண்ட அக்ஷரா ரெட்டிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதே போல, பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும், எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தாமல், இயல்பாக வருண் நடந்து கொண்டது பலரையும் கவர்ந்துள்ளது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாதவாறு, முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடந்தது. அதே போல, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வருண் மற்றும் அக்ஷரா இருவருமே ஒன்றாக வெளியேறினர். தகுதி இல்லாதவர்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இவர்களை எப்படி வெளியேற்றலாம்? என்று பலரும் கொந்தளித்தனர். ஆனாலும் இவர்கள் வெளியேறிய பிறகு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எலிமினேட் ஆன பிறகும், மிகவும் நெருங்கிய நண்பர்களாக வருண் மற்றும் அக்ஷரா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். அவ்வபோது எடுக்கப்படும் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள கணக்குகளில் பதிவேற்றி வருகின்றனர். இதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வருண் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அன்று திரையிடப்பட்டது. அந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தற்போது வருண் அக்ஷரா இருவருமே ஜோடியாக நடிப்பதற்காக ஒரு புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.

நடிகர் சஞ்சீவ் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியான போது, இருவரும் அவரைச் சந்தித்த புகைப்படமும் வெளியானது.

மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நாயகனாக வருணும், நாயகியாக அக்ஷராவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஆனால், வருணின் தாய் மாமாவான ஐசரி கணேஷின் நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஷனல் இந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை. இது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் என்று கூறப்படுகிறது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment