புல் தரையை உருவாக்குவதற்குத் தேவையான சில குறிப்புகள்!!!

by Lifestyle Editor

தினமும் அதிக நேரம் நாம் இருப்பது நாம் வாழும் வீட்டில் தான். அப்படிப்பட்ட வீட்டை நம் தேவைக்கேற்ப வடிவமைத்து வசதிகளை உண்டாக்கி கொள்கிறோம். மேலும் அதற்கு அழகு சேர்க்கும் விதமாக பலவித அலங்கரிப்புகளையும் செய்கின்றோம். அப்படி அலங்கரிப்படுவதில் ஒன்று தான் வீட்டுத் தோட்டம்.

தோட்டம் பல வகைப்படும். பல வகையான வண்ண செடிகள், கொடிகள், காய்க்கனிகள் கொடுக்கும் செடிகளையும், மரங்களையும் தோட்டத்தில் வளர்க்கலாம். வெறும் புற்களை கூட படர விடுவதும் தோட்டதுக்கு அழகு சேர்க்கும். அப்படிப்பட்ட புற்களை பயிரிடுதல் முதல் வளர்ப்பது வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாமா!!!

ஒரு புதிய புல்தரையில் பயிரிட்டால் அல்லது ஏற்கனவே இருக்கும் புல்தரையில் மேலும் அதிகம் பயிரிட்டால் வளமைத் ததும்பி பச்சைப் புற்கள் தழைக்க வேண்டும். புதிதான வளரும் புற்களின் வளர்ச்சி விகிதத்தை நிர்ணயிப்பது நாம் பயன்படுத்தும் விதைகள், பயிரிடும் காலம் மற்றும் பயிரிட உரிய மண் தயாரித்தல் போன்றவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு பயிரிட்டால் கண்டிப்பாக வீட்டுத் தோட்டத்தில் வளமான அழகிய புல்தரை படர்ந்திருக்கும்.

காலம் புற்கள் வளரும் வட்டாரம் மற்றும் தட்ப வெப்ப நிலையை பொறுத்து அதனை கோடைக்காலத்து புற்கள் அல்லது குளிர் காலத்து புற்கள் என்று இரண்டு வகைப்படுத்தலாம். புதிய புல்தரையை பயிரிட மற்றும் ஏற்கனவே இருக்கும் புல்தரையில் மேலும் அதிகமாக பயிரிட தகுந்த காலத்தை தீர்மானிப்பது புற்களின் வகையே.

குளிர்கால புற்கள் பயிரிட சரியான நேரம் இலையுதிர்காலமே. ஈரப்பதத்திற்காகவும், வளர்வதற்கு தேவையான இடத்தை எடுத்துக் கொள்ளவும், புற்களுடன் சேர்ந்து வளரும் களைகள், கோடைகால முடிவில் தானாகவே காய்ந்து போய்விடும். குளிர் காலத்தின் குளிர்ச்சியான வெப்பநிலை, குளிர்காலத்து புற்கள் அரும்புவதற்கும், தண்ணீர் ஆவியாவதை குறைப்பதற்கும் உதவி புரியும். கோடைக்கால புற்கள் நன்கு வளர்வது இளவேனிற்காலம் முடிவில் அல்லது கோடைக்காலம் தொடங்கும் நேரமாகும். இக்காலத்தில் பயிரிட்டால் புற்கள் அரும்ப கோடை மழை உதவியாக இருக்கும். மேலும் புல்தரையில் பயிரிட தேவையான சிறந்த வகையான புல் மற்றும் பயிரிட உகந்த காலம் ஆகியவற்றை செடி வளர்ப்புப் பண்ணை அல்லது மாவட்ட விரிவாக்க அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்..

புல்தரையில் பயிரிடுதல்

புற்களின் பயிர்கள் வேர் விடுவதற்கு முன், அது வளரப் போகும் மண்ணை தயார்படுத்துதல் மிகவும் முக்கியம். பயிரிடும் முன் வெற்று இடமாக இருக்கும் தோட்டத்து நிலத்தை 2.5-3 அங்குலம் வரை பொந்து விழும் அளவிற்கு உழ வேண்டும். தோட்டத்தை உழுவதற்கு உதவும் கருவியை வைத்து இதை செய்து முடித்தால், மண்ணின் இறுக்கம் குறைந்து விடும். தேவையான இடத்தின் பரப்பளவை சீராக்கி விட்டு, பின் தேவையற்ற மண் கட்டிகளை கையினால் கிளறியோ அல்லது வாரியோ எறிய வேண்டும்.

பயிரிட தேவையான பரப்பைத் தயார்ப்படுத்தியப் பின், விதைகளை பக்குவமாக அனைத்து திசைகளிலும் சரிசமமாக தூவி விட வேண்டும். பலரின் கருத்துப்படி இந்த பயிரிடும் வேலை இரண்டு முறை நடக்க வேண்டும். முதலில் ஒரு திசையில் நடந்துச் சென்று பயிரை தூவி விட வேண்டும், பின்னர் 90 டிகிரி கோணத்தில் சென்று தூவிட வேண்டும். பயிரிட்ட மண்ணை வைக்கோலைக் கொண்டு லேசாக மூடி வைத்தால், காற்று மற்றும் பறவைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

மேலும் அது ஒரு காவலாகவும் அமையும். முக்கியமாக முதல் இரண்டு வாரங்களுக்கு, தினசரி மூன்று அல்லது நான்கு முறை பயிரிட்ட இடத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். புற்கள் அரும்பத் தொடங்கும் நேரம், தினமும் ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது. புதிதாக வளர்ந்த புற்களை செதுக்குவது அல்லது வெட்டுவது, அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். மேலும் தோட்டத்தில் புற்களின் உயரம் 2-3 அங்குலம் உயரம் வரும் போது, புல்லை சீர்நிலையாக வெட்ட ஆரம்பித்து விடலாம். அதிலும் ஏற்கனவே இருக்கும் புல்தரையை மேலும் அதிகம் பயிரிட வேண்டுமானால், முதலில் காய்ந்த புற்களை அப்புறப்படுத்த வேண்டும். இதை கைகளாலேயே பிடுங்கி எறியலாம் அல்லது அதற்குண்டான கருவி மூலம் செய்து முடிக்கலாம். ஒரு விதையை வளர்விக்க நாம் கடைப்பிடிக்கும் அனைத்து செய்முறைகளையும், அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் ஒரு புதிய புல்தரையை பயிரிடும் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment