தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்?

by Column Editor

தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.

அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அது மட்டுமல்லாமல் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வருடம் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆல் பாஸ் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment