தூத்துக்குடியில் நாளை அரையாண்டு தேர்வு தொடங்குகிறது!

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.

அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 -டிச. 22ம் தேதி வரையும், 6-10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.11- டிச.21 ம் தேதி வரையும் நடைபெற்றது. பல பள்ளிகளில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து கடந்த 23ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (02-01-2024) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை (03-01-2024) முதல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 4 முதல் 11ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மழை, வெள்ள பாதிப்பு மற்றும் அரையாண்டு விடுமுறைக்குப் பின் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டநிலையில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்குகிறது.

Related Posts

Leave a Comment