இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ..

by Lifestyle Editor

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் முதல் அதாவது டிசம்பர் 17ஆம் தேதி முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கையில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிய நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வும் புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

Related Posts

Leave a Comment