ஸ்கொட்ரயில் ஊழியர்கள் தனிமைப்படுத்தல்: ரயில் சேவை ஸ்தம்பிதம்!

by Column Editor

ஸ்கொட்ரயில் ஊழியர்கள் கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) மட்டும் 100க்கும் மேற்பட்ட சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டின் தாக்கத்தை ஈடுசெய்யும் முயற்சியில் ஸ்கொட்ரயில், ஜனவரியில் ஒரு தற்காலிக கால அட்டவணைக்கு மாறும்.

செவ்வாயன்று ஸ்கொட்லாந்தில் 15,849பேர் நேர்மறை சோதனை செய்ததை முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் உறுதிப்படுத்தியதையடுத்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் சுமார் 60 நடத்துனர்கள் உட்பட 320 ஊழியர்கள் தற்போது பணிக்கு வரவில்லை என ஸ்கொட்ரயில் தகவல் தொடர்பு இயக்குநர் டேவிட் ரோஸ் தெரிவித்துள்ளார்.

இது 5,300 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொறியாளர்களின் தொழிலாளர் தொகுப்பில் சுமார் 6 சதவீதம் ஆகும்.

Related Posts

Leave a Comment