பிக்பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸாக வந்த சிபியின் மனைவி.. உற்சாகத்தில் போட்டியாளர்கள் !

by Column Editor

பிக்பாஸ் வீட்டிற்கு சிபியின்‌ மனைவி வருவதால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் ப்ரோமோ‌ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வியடாஸ் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த டாஸ்க் இன் படி போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுக்கின்றனர். முதலில் அக்ஷராவின் தாய் மற்றும் சகோதரர் வருவதால், மகிழ்ச்சி அடைகிறார்.

இதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் கன்பெக்ஷன் ரூமுக்கு செல்கிறார் சிபி. அப்போது சர்ப்ரைஸாக சிபியின் மனைவி ஸ்லேகா அங்கு இருக்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடையும் சிபி ஸ்லேகா நீ எப்போது வந்தாய். நீ மும்பையில் இருக்கிற என்று சொன்னாங்க என்று சொல்லி கட்டிப்பிடித்து தனது அன்பை பரிமாறுகிறார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்கு சிபி தனது மனைவியை அழைத்துச் செல்லும் சக போட்டியாளர்கள் குதூகலமாகிறார்கள்.

பின்னர் அக்ஷரா, பிரியங்கா ஆகியோர் ஸ்லேகாவை கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறுகின்றனர். அதன்பிறகு ஸ்லேகாவை கட்டிப்பிடி சிபி என்று பிரியங்கா கேட்க, அதற்கு அப்போதே பண்ணிட்டேன் என்கிறார். நாங்க பார்க்கவில்லை. அதனால் இன்னொரு முறை கட்டிப்பிடி என பிரியங்கா கேட்க, சிபியும் செய்கிறார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் சொந்தங்கள் அடுத்தடுத்து வருவதால் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கிறது.

Related Posts

Leave a Comment