ஐயப்பனின் சரணம்

by Lifestyle Editor

மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழி நடைசரணத்தை தினமும் பாடி வழிபாடு செய்ய வேண்டும்.

சுவாமியே…….. அய்யப்போ
அய்யப்போ….. சுவாமியே
சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்
தேவன் சரணம்….. தேவி சரணம்
தேவி சரணம்….. தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்…. பகவதி சரணம்
பகவதி சரணம்… பகவான் சரணம்
சங்கரன் சரணம்…. சங்கரி சரணம்
சங்கரி சரணம்…. சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்…காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை… கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்… கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்… குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு…… சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…… கட்டும் கட்டு
யாரை காண…. சுவாமியை காண
சுவாமியை கண்டால்… மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்… இப்போ கிட்டும்
தேக பலம் தா… பாத பலம் தா
பாத பலம் தா… தேக பலம் தா
ஆத்மா பலம் தா… மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்…. சுவாமிக்கே
சுவாமிக்கே… நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்….. சுவாமிக்கே
சுவாமிக்கே… பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்…… சுவாமிக்கே
சுவாமிக்கே… அவலும் மலரும்
சுவாமி பாதம்… ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்… சுவாமி பாதம்
தேவன் பாதம்… தேவி பாதம்
தேவி பாதம்… தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்… ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்… ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்….. அய்யப்ப் திந்தக்க தோம் தோம்..

Related Posts

Leave a Comment