திருமந்திரம் – பாடல் 1596 : ஆறாம் தந்திரம் – 2

by Lifestyle Editor

திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

இதையத்து நாட்டத்து மென்றன் சிரத்தும்
பதியித்த வந்தப் பராபர னந்தி
கதிவைத்த வாறு மெய்காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.

விளக்கம்:

எமது இதயத்தில் இருக்கின்ற விருப்பத்திலும் எமது தலையின் மேலும் தனது திருவடியை நீங்காமல் வைத்து அருளிய அந்த அசையா சக்தியாகிய பரம்பொருளாகவும் குருநாதராகவும் இருக்கின்ற இறைவன் யாம் முக்தி அடைவதற்காக வைத்து அருளிய வழியையும் உண்மைப் பொருளை எமக்கு காட்டி அருளிய வழியையும் இயல்பான வாழ்க்கையின் இறப்பு விதியை மாற்றி தம்மை வந்து அடைவதையே விதியாக வைத்து அருளிய வழியையும் எம்மால் வார்த்தைகளால் விவரித்து சொல்ல இயலாது.

Related Posts

Leave a Comment