ஒமைக்ரான் உருமாற்று வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 400 சதவீதம் அதிகரிப்பு

by Lifestyle Editor

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலையை என வரிசையாக கடந்து வந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்கரான் உருமாற்ற வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் 2-வது அலை உருவாகி மிகப்பெரிய இழப்பிற்கு காரணமாக இருந்து டெல்டா வைரஸை வீட இது தீவிரமானது என வல்லுனர்கள் எச்சரித்துள்ளதால், ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

அப்படி இருந்தும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ்க்கு தற்போது இங்கிலாந்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் 4-வது அலை உருவாகும் என்ற அச்சம் நிலவி வருகிறது. அங்கு கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 30-ந்தேதி 4,373 ஆக இருந்த தினசரி பாதிப்பு கடந்த 10-ந்தேித 19,017 ஆக அதிகரித்துள்ளது. இருந்தாலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை. டெல்டாவை விட லேசான அறிகுறியைதான் காண்கிறோம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை தீவிரமாக அதிகரிக்கவில்லை என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 6 சதவீதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புள்ளாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவில் இதுவரை 38 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment