ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங்குக்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!!

by Column Editor

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் உயிர் தப்பியவர் விங் கமாண்டர் (விமானி) வருண்சிங் ஆவார். இவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று மதியம் வருண்சிங் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ கமாண்டோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment