வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் …

by Lifestyle Editor

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக் கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக் கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வணிக நோக்கு வர்த்தக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தும் பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன்படி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 1வது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் சிங்கப்பூரின் டெலியோஸ் -2 செயற்கைக்கோளை சுமந்து பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இது இஸ்ரோவின் 57வது ராக்கெட் ஆகும். இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு பயன்படக்கூடியது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். ராக்கெட் ஏவுவதையொட்டி பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் என்று கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment