அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ நாளை வெளியாகிறது முக்கிய அப்டேட் !

by Column Editor

அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிடுகிறது.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமானவர்கள் அஸ்வின்குமார் மற்றும் புகழ். இவர்கள் தற்போது இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மற்றும் தேஜு அஸ்வினி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் படமாக உருவாகும் இப்படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு விவேக் மேர்வின் கூட்டணி இசையமைத்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவும் படக்குழு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment