புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்.. ‘பீஸ்ட்’ ரிலீஸ் குறித்த அறிவிப்பு !

by Column Editor

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய்யின் மாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் மாஸாக உருவாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முழுக்க முழுக்க தங்க கடத்தலை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த விஜய் ராணுவ கமாண்டாவாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்படம் அடுத்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு புத்தாண்டையொட்டி அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ள்து.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃப்ரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment