மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சேவையாற்றியவர்களுக்கு மாநில விருது!!

by Column Editor

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி ரூ1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில் காண புதிய கட்டடத்தை திறந்து வைத்து பார்வைக் பார்வை குறை உடையோர்க்கு பணி நியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி மாற்றத்தினறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவை புரிந்ததற்காக சிறந்த சமூக பணியாளர் விருதினை செல்வி ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன் அவர்களுக்கும் , சிறந்த நிறுவனத்திற்கான விருதினை, விருதுநகர் மாவட்டம் சப்தகிரி அறக்கட்டளைக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிப்பதற்காக திருமதி ஜெயந்தி அவர்களுக்கும் , பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கற்பிப்பதற்காக மாரியம்மாள் அவர்களுக்கும் வழங்கினார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் மேலும் பலருக்கு விருது வழங்கி, முதலமைச்சர் பாராட்டினார்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின், மறுவாழ்வுக்காக 1972 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் அரசு மறுவாழ்வு இல்லம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் அரசு மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு , உறைவிடம், உடை, மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. தையல் மற்றும் காலணி தயாரிப்பு போன்ற பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஏற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment