நிரூப் செய்த வேலையால்… இமான் அண்ணாச்சி பிரியங்கா இடையே மோதல்; ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

by Column Editor

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியானது 5 தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் நிகழ்ச்சியில் கமலுக்கு கொரோனா தொற்றால், ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினாலும், எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் தான் போய் இருக்கிறது. மேலும், ஐக்கி பெர்ரி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேறினார்.

இந்நிலையில், இன்றைக்கு கொடுக்கப்பட்ட தலைவர் பதவிக்கான டாஸ்கில் இமான் அண்ணாசியை வெற்றி பெற்றார் என நினைத்த நிலையில், அடுத்த ப்ரோமோவில் நிரூப் தலைவராக இருந்து வேலை கொடுப்பதுபோல் காட்டியுள்ளனர்.

இதனால், இமான் அண்ணாச்சு கொந்தளித்து நீ சொல்லுற வேலை எல்லாம் செய்ய முடியாது என வாக்குவாதம் செய்ய, தற்போது வெளியான அடுத்த ப்ரோமோ லீக்கில், நிரூப் மற்றும் இமான் இடையே மோதல், ஏற்பட பிரியங்கா இமானிடம் சண்டையிடுகிறார். இதைக்கண்ட சக போட்டியாளர்கள் ஸ்தம்பித்து போக, பிக்பாஸ் வீடே ரணகளமாகி உள்ளது.

Related Posts

Leave a Comment