பிக்பாஸில் கமலுக்கு பதில் இந்த நடிகர்? வெளியே கசிந்த தகவல்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியினை கமலுக்கு பதிலாக விஜய்சேதுபதி, சிம்பு இருவரில் ஒருவர் சில வாரங்களுக்கு தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உலகநாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றார்.

இந்நிலையில் இவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியினை யார் தொகுத்து வழங்குவார் என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி தொகுத்து வழங்குவார் என்று பல வதந்திகள் வெளியாகியது. ஆனால் தற்போது அவருக்குப் பதில் நடிகர் விஜய் சேதுபதி அல்லது நடிகர் சிலம்பரசன் இருவரில் ஒருவர் அடுத்த சில வாரங்களுக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

மேலும் சில நடிகர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இவர்கள் இருவரில் ஒருவர் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகின்றது.

கமலுக்கு கொரோனா தொற்றின் தீவிரம் குறைவாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையின் படி நிகழ்ச்சியை விர்ச்சுவலாக தொகுத்து வழங்கமுடியும் எனவும் கூறப்பட்டு வருகின்றது.

இதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உரியமுறையில் செய்யப்பட்டு வருவதாக கூறும் நிலையில், கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளாரா? அல்லது விஜய்சேதுபதி சிம்பு இருவரில் யாரேனும் வரவிருக்கின்றனரா? என்ற கேள்வி மக்களிடையே அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment