பிக்பாஸில் இன்று அதிரடியாக எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்: இடி மின்னலுடன் வரவேற்கும் பிக்பாஸ்

by Column Editor

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் நுழைய இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இரண்டு பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ள நிலையில் தற்போது சஞ்சீவ் அதிரடியாக இன்று உள்ளே செல்கின்றார்.

இன்று வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற போது மெயின் கதவு திறக்கப்பட்டதும், பிரியங்கா ஓடிவந்து யாரோ வாராங்க என்று கூச்சல் போட்டதை முதல் ப்ரொமோ காட்சியில் வெளியிட்டிருந்தனர்.

விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் வெங்கட் சீரியலில் மட்டுமின்றி பல படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களின் ஆசையினை பிக்பாஸ் இன்று நிறைவேற்றி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியினைக் காண்பதற்கு மக்கள் பெரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment