எண்ணெய்- எரிவாயு துறைக்கு பிரித்தானியா 13.6 பில்லியன் பவுண்டுகளை மானியமாக வழங்கியுள்ளது!

by Column Editor

2015ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கைக்குப் பின்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கு 13.6 பில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ளது.

பிரச்சாரக் குழுவான ‘பெய்ட் டு பொலியுட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 முதல் 2020 வரை நிறுவனங்கள் புதிய ஆய்வு மற்றும் உற்பத்திக்காக 9.9 பில்லியன் வரிச் சலுகைகளைப் பெற்றதாகவும், பணிநீக்கச் செலவுகளுக்காக 3.7 பில்லியன் செலுத்தியதாகவும் தரவுகள் கூறுகிறது.

கிளாஸ்கோ காலநிலை ஒப்பந்தத்தில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், திறனற்ற புதைபடிவ எரிபொருள் மானியங்களை படிப்படியாகக் குறைக்க உறுதியளித்தன

தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட வெப்பமயமாதலை 1.5 செல்சியஸ் வரை கட்டுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

இந்த இலக்கை அடைய, உலகம் 2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும், அதாவது இந்த ஆண்டுக்குப் பிறகு புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சிகள் இருக்க முடியாது என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

1.5 டிகிரி செல்சியஸ் இலக்கு என்பது கேம்போ மற்றும் குறைந்தது நான்கு முன்மொழியப்பட்ட திட்டங்களாவது சிறிய அல்லது பொருளாதார மதிப்பின்றி சிக்கித் தவிக்கும் சொத்துகளாக மாறும் அபாயம் இருப்பதாக நிதியியல் சிந்தனைக் குழுவான கார்பன் டிராக்கர் எச்சரித்துள்ளது.

Related Posts

Leave a Comment