இங்கிலாந்தில் பராமரிப்பில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டளவில் 100,000ஐ எட்டும்!

by Column Editor

இங்கிலாந்தில் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 100,000ஐ எட்டும் என புதிய பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு தசாப்தத்தில் இந்த எண்ணிக்கை 36 சதவீத உயர்வைக் குறிக்கும் என்று கவுண்டி உள்ளூர் சபைகளால் நியமிக்கப்பட்ட ஆராய்ச்சி குழு கூறுகின்றது.

எதிர்பார்க்கப்படும் இந்த அதிகரிப்பு, ஏற்கனவே உள்ளூர் அதிகார வரவு செலவுத் திட்டங்களில் முன்னோடியில்லாத அழுத்தத்தை கொடுக்கிறது.

சிறுவர்கள் பராமரிப்பு உட்பட, முக்கியமான முன்னணி சேவைகளை பராமரிக்க உதவுவதற்காக, உள்ளூர் சபைகளுக்கு 4.8 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளித்து வருவதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Related Posts

Leave a Comment