இந்த உணவு சாப்பிட்டு தான் 27 கிலோ உடல் எடையை குறைத்தேன்- மனம் திறந்த நடிகர் சிம்பு

by Column Editor

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

வருகிற 25-ந் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்,நடிகர்கள் SJ சூர்யா, இயக்குனர் SA சந்திரசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்புகளை மிகுதியாக்கியுள்ளது.

இந்நிலையில் மாநாடு படத்திற்காக 27 கிலோ உடல் எடையை குறைத்து கம்ப்ளீட் transformation லுக்கில் நடித்திருக்கிறார் சிம்பு.

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை குறித்து தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியதன்படி உடல் எடையை குறைப்பதற்காக 2 மாதங்கள் முழுவதும் நீர் ஆகாரம் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டதாகவும் solid உணவு வகைகளை உட்கொள்ளவில்லை என்றும் பல சிரமங்களை தாண்டி வந்ததால் தான் இங்கு இந்த இடத்தில் இப்படி ஒரு தோற்றத்தில் தான் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் சிம்பு.

Related Posts

Leave a Comment