314
சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.
அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 25 ஆம் தேதி உலகமுழுவதும் இப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடந்துள்ளது. இதில் சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் மேடையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிவந்த சிம்பு திடீரென மனமுடைந்து கண்கலங்கினார்.
அப்போது சிம்பு “நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் என்னை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என ரசிகர்களிடம் கூறியுள்ளார்.