வலிமை படத்தை வாங்க கடும் போட்டி போடும் விநியோகஸ்தர்கள், இத்தனை கோடியா!

by Column Editor

தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித் நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் படம் தான் வலிமை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு H.வினோத்துடன் வலிமை படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளார் தல.

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வையை தயாரித்து வழங்கிய போனி கபூர் தயாரிக்கவுள்ளார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென எதிர்பார்க்கும் நிலையில் படத்தை விநியோகிக்கும் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்ஸ் இணைந்து வாங்கியிருக்கிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு மாதங்களுக்கும் மேலாக சமயம் இருக்கும் நிலையில் இப்போதே ஏரியா வாரியாக படத்தை விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

2 வருடங்களுக்கு மேலாக தல அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் வலிமை படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

அதோடு பலரும் வலிமை படத்தை அதிக தொகைக்கு வாங்க கடும் போட்டி போட்டு வருகின்றார்களாம்.இதில் ரூ 65 கோடி முதல் அதற்கும் மேலாக இப்படம் தமிழ்நாடு வியாபாரம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment