20 ஓவர் கிரிக்கெட் போட்டி – இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

by Column Editor

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடக்க இருக்கிறது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட் கோலி விலகிவிட்டார். இதனையடுத்து, 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் இப்போட்டியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment