எவிக்ஷனில் இத்தனை போட்டியாளர்களா ? ஷாக்கான அபினய்

by Column Editor

இந்த வார எபிக்ஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார எபிக்ஷன் நடைமுறை இன்று தொடங்கியது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் யார் யார் என்பதை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி ஐக்கி, பாவனி, சிபி, இமான், இசைவாணி, அபினய் ஆகியோர் இந்த வார நாமினேஷில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலை அறிவித்த பிறகு வரிசையாக நாமினேஷில் உள்ளவர்களின் படங்களின் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கிறது.இந்த பதாகையில் ஐக்கியின் படத்தின் மீது ஸ்ப்ரே அடித்து, இப்படியொரு ஒருத்தவங்க பிலிம் ஆவாங்க என நான் எதிர்பார்க்கவில்லை என்று பிரியங்கா கூறினார். அடுத்து ஸ்ப்ரே அடிக்கும் இமான் அண்ணாச்சி, பாவனி நடிக்கிறாங்களே என்று தோணுது என்றார். வேணும்னு என்னை டார்க்கெட் செய்யுற மாதிரி இருக்கு என்று அக்ஷரா சிபியை சொல்கிறார். மேலும் இமான் அண்ணாச்சி போட்டியாளர்களை மட்டம்தட்ட ஆரம்பிச்சிருக்காரு என்று அபினய் கூறினார். நம்ம என்ன சொல்கிறோம் என்று புரியவில்லை, அதற்கு எதிராக புரிஞ்சிக்கிற என்று இசைவாணியை குற்றச்சாட்டினார் ஐக்கி. ஒவ்வொரு வாரமும் இருப்பது போல் இந்த வாரமும் அபினய் பெயர் அறிவிக்கப்பட்டதால் சக போட்டியாளர்கள் சிரித்து அபினய்யை கலாய்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment