ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

by Column Editor

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேச்சிலர்’. சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இப்படத்ததில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. கோவையில் இருந்து பெங்களூரு ஐடி கம்பெனி வேலை செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தால் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு ரிலீசுக்கு தயாராக இப்படம் ஓடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதை படத்தயாரிப்பு நிறுவனம் மறுத்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment