கண்மணியை அறிமுகப்படுத்திய ‘காத்து வாக்கு ரெண்டு காதல்’ படக்குழு

by Column Editor

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தா கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திரங்களாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் முதல்முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. ‘நானும் ரௌடிதான்’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் முதல் போஸ்டரான விஜய் சேதுபதி 3 முகத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டது. ராம்போ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என விரிவாக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து க்யூட் லுக்கில் இருக்கும் சமந்தாவின் இரண்டாவது போஸ்டர் மாலையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கண்மணி கேரக்டரில் நடிக்கும் நயன்தாராவின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காமெடி ரொமான்ஸ் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment