பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியத் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அவர் மறைந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது நினைவிடத்தில் மக்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டு தான் உள்ளனர்.
தற்போது புனீத் பற்றிய ஒரு சுவரசியத் தகவல் வெளியாகியுள்ளது. புனீத் தனது மக்கள் நலத் திட்ட உதவிகளுக்காக ரூ. 8 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையாக முன்பு டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது.
எனவே புனீத் இல்லாவிட்டாலும் அந்தப் பணம் அவர் நடத்தி வரும் 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலைகள் மற்றும் அவரால் முன்பு நடத்தப்பட்ட 45 பள்ளிகளுக்கு நிதியுதவி அளிக்கப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
புனீத் ஏழை எளிய மக்களுக்கு எப்படி உதவி வந்துள்ளார் என்பது அனைவர்க்கும் தெரியும். தனக்கு ஏதாவது நேர்ந்தாலும் தன்னுடைய உதவி நிற்கக் கூடாது என்று அவர் செய்துள்ள இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும் 8 கோடி டெபாசிட் குறித்து புனிதத்தின் குடும்பத்தினர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் நடிகர் விஷால், அடுத்த ஆண்டு முதல் புனீத் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்வியை இனி தான் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
214