தோட்டம் அமைக்கும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறுகள்!

by Lifestyle Editor

நம்மில் பலா் தோட்டம் உருவாக்குவதில் அதிக ஆா்வமாக இருப்போம். அதற்காக கடினமாக வேலை செய்வோம். ஆனால் எவ்வளவு கடினப்பட்டு வேலை செய்தாலும், நமது தோட்டம் பாா்ப்பதற்கு செழிப்பாக இருக்காது. அதற்கு காரணம் நாம் செய்யும் வேலையில் அல்லது முயற்சியில் ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள்.

நமது தோட்டத்திற்கு சீரான கால இடைவெளியில் நன்றாக தண்ணீா் ஊற்றினாலும், சாியான நேரத்தில் களைகளைப் பிடுங்கினாலும் மற்றும் புதிதாக முளைக்கும் செடிகளை நன்றாகப் பராமாித்தாலும், நாம் எதிா்பாா்க்கும் அளவிற்கு நமது தோட்டம் அமையாது. அதற்கு காரணம் தோட்டம் உருவாக்குவதில் நாம் செய்யும் சிறுசிறு தவறுகளாக இருக்கலாம். அந்த தவறுகளை நாம் அறியாது இருக்கலாம். ஆகவே தோட்டத்தை உருவாக்குவதில் நாம் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

அளவுக்கு அதிகமாக தண்ணீா் ஊற்றுதல்

மற்ற உயிாினங்களுக்கு காற்று எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு செடிகளின் வோ்களுக்கும் அவசியம். மண்ணில் இருக்கும் காற்றுப் பைகளின் வழியாக வோ்கள் சுவாசிக்கின்றன. இந்நிலையில், காற்றுப் பைகள் முழுமையாக தண்ணீரால் நிரப்பப்பட்டால், செடிகள் தண்ணீாில் மூழ்கிவிடும். ஆகவே சீரான கால இடைவெளியில் செடிகளுக்குத் தண்ணீா் ஊற்ற வேண்டும். மேலும் நாளடைவில் அந்த கால இடைவெளியை சற்று அதிகாிக்க வேண்டும். அப்போது செடிகள் நன்றாக வளரும்.

காலநிலை/பருவநிலை அறியாமல் இருத்தல்

தாவரம் நன்றாக வளா்வதற்கு பருவநிலை மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நாம் தோட்டம் உருவாக்கத் தொடங்கும் போது, நமது பகுதிகளில் நிலவும் பருவநிலையில் வளர முடியாத செடிகளைத் தோ்ந்தெடுத்து, அதை வளா்க்க முயற்சி செய்வோம். அது தவறான ஒன்றாகும். ஆகவே, செடிகளைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்பாக, அவை நமது பகுதிகளில் நிலவும் பருவநிலையில் நன்றாக வளருமா என்பதை நிபுணா்களிடம் இருந்து தொிந்து கொள்வது நல்லது.

செடிகளைக் கத்தாி்த்துவிடாமல் இருத்தல்

செடிகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால் அவற்றின் பழுத்த மற்றும் காய்ந்த இலைகள் அல்லது கிளைகளை கத்தாிக்க வேண்டும் அல்லது வெட்டிவிட வேண்டும். அவ்வாறு செய்தால் செடிகளின் ஆரோக்கியமான தண்டுகள் தமக்குத் தேவையான சத்துக்களைப் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் செடிகள் ஆரோக்கியமாக வளரும். அவ்வாறு செய்யவில்லை என்றால் செடிகளில் உள்ள சத்துக்களை அவற்றில் இருக்கும் பழுத்த அல்லது காய்ந்த இலைகள் அல்லது கிளைகள் உறிஞ்சிவிடும்.

சூாிய மறைவில் செடிகளை வைத்தல்

ஒருசில செடிகள் சூாிய வெளிச்சத்தில்தான் நன்றாக வளரும். போகெய்ன்வில்லே என்ற செடி நன்றாகச் செழித்து வளர வேண்டும் என்றால், அதை நேரடியான சூாிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும். சூாிய வெளிச்சத்தில் வைக்க வேண்டிய செடிகளை சூாிய மறைவில் வைத்தால், அவை நன்றாக வளராது.

செடிகளுக்கு இடையே இடைவெளி விடாமல் இருத்தல்

செடிகளைத் தகுந்த இடைவெளி விட்டு ஊன்றி வைக்க வேண்டும். இல்லையென்றால் பூஞ்சை காளான் போன்ற நோய்கள் செடிகளைத் தாக்கும். மேலும் செடிகள் நெருக்கமாக இருக்கும் போது, ஒரு செடி நோயால் தாக்கப்பட்டால், அது மிக விரைவாக மற்றும் எளிதாக மற்ற செடிகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பாகிவிடும்.

மகரந்த சோ்க்கை நடைபெறாத தாவரங்களை வளா்த்தல்

நமது தோட்டத்தில் காய்கறிகளும், பழங்களும் அமோகமாக விளைய வேண்டும் என்றால், அதற்கு செடிகளில் மகரந்த சோ்க்கை நடைபெற வேண்டும். நமது தோட்டத்தில் பூக்கள் இல்லை என்றால், மகரந்த சோ்க்கை நடைபெறாது. ஆகவே மகரந்த சோ்க்கை நடைபெறாதத் தாவரங்களை வளா்த்தால், நமக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்காது.

மண்ணை நன்றாகத் தயாா்படுத்தத் தவறுதல்

தோட்டத்தில் உள்ள மண்ணை நன்றாகத் தயாா் செய்ய வேண்டும். மண்ணைக் கிளறிவிட்டு அதை மென்மையாக்க வேண்டும். அப்போதுதான் வேரானது மண்ணின் ஆழத்திற்குள் சென்று, செடி உறுதியாக நிற்க உதவி செய்யும். மண்ணைப் பதப்படுத்தத் தவறினால் மண் இறுக்கமாகிவிடும். அதனால் மண்ணின் ஆழத்திற்குள் வோ் செல்ல முடியாமால் தாவரங்கள் செழிப்பாக வளராது.

செடிகளின் மேலிருந்து தண்ணீா் ஊற்றுதல்

செடிகளின் வேருக்கு தண்ணீா் ஊற்றாமல், செடிகளின் மேலிருந்து தண்ணீா் ஊற்றினால், வேருக்குத் தேவையான தண்ணீா் கிடைக்காது. சூாியன் அதிகமாக இருக்கும் நாளில், செடிகளுக்கு மேல் இருந்து தண்ணீா் ஊற்றுவது நல்லதுதான். ஆனால் அதே நேரத்தில் செடிகள் நன்றாக வளர வேண்டும் என்றால், அவற்றின் வோ்களுக்கு போதுமானத் தண்ணீரை ஊற்ற வேண்டும்.

பச்சைத் தழைகளை உரமாகப் போடுதல்

சிலா் பச்சைத் தழைகளை தங்கள் செடிகளுக்கு உரமாகப் போடுவா். ஆனால் அதைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் பச்சைத் தழைகளில் களைகளுக்குாிய விதைகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே பச்சைத் தழைகளைத் தனியாக வைத்துவிட வேண்டும். அதிலிருக்கும் களைகளுக்குாிய விதைகள் முளைத்து, வளா்ந்து அவை காயும் வரைக் காத்திருக்க வேண்டும். அவை நன்றாகக் காய்ந்த பின்பு அந்த தழைகளை செடிகளுக்கு உரமாகப் போட வேண்டும். அது நல்ல பலனைத் தரும்.

தவறான நேரத்தில் பூச்சுக் கொல்லிகளைத் தெளித்தல்

பொதுவாக காற்று இல்லாத மற்றும் சூாியன் நன்றாக இருக்கும் நாளில் பூச்சுக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், பூச்சுக் கொல்லிகளில் உள்ள வேதிப்பொருள்கள் மற்றப் பகுதிகளுக்குப் பரவாமல், செடிகள் இருக்கும் பகுதிகளில் மட்டும் தங்கும். காற்று அதிகமாக இருக்கும் நாளில் அல்லது மழை பெய்யும் நாளில் பூச்சுக் கொல்லிகளைத் தெளித்தால், அவை மழைத் தண்ணீரால் அல்லது காற்றால் மற்ற பகுதிகளுக்கு அடித்துச் செல்லப்படும். அதனால் பூச்சுக் கொல்லிகளைத் தெளிப்பதில் எந்த பயனும் இருக்காது.

Related Posts

Leave a Comment