நிரூப் பேசிய சர்ச்சை வார்த்தைக்கு கமல் கொடுத்த பதிலடி!

by Lifestyle Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரில் மதுமிதா இடம்பெற்றுள்ளார்.

இந்தநிலையில், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த விளையாட்டின் போது நிரூப்பால் சில சர்ச்சைகள் எழுந்தது. அந்த எபிசோட் பெரும்பாலும் மியூட்டுடன் பீப் சத்தத்துடனுமே இருந்தது. அந்த அளவுக்கு அநாகரிகமாக பேசிக் கொண்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

அதிலும், குறிப்பாக நிரூப், சிபி, வருண், ஆகியோருக்கு இடையே நடந்த சண்டை நிகழ்ச்சியின் தரத்தையே குறைத்து விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த டாஸ்க் குறித்து விவாதித்த கமல் நிரூப் விளையாடிய விதம் யாருக்கு பிடிக்க வில்லை, யாருக்கு பிடித்திருந்தது என கேட்டார். அப்போது பேசிய வருண், என்னை டார்கெட் செய்து முடிக்க வேண்டும் என்றுதான் விளையாடினார் என்று கூறி தனக்கு நிரூப் விளையாடிய விதம் பிடிக்கவில்லை என்றார்.

இதேபோல் அக்ஷரா மற்றும் பிரியங்கா ஆகியோரும் அவர் விளையாடிய விதம் பிடிக்கவில்லை எனக்கூறினார்கள். இதன் பின்னர் பேசிய கமல் நிரூப்பை பொம்பள பின்னாடி ஒளியிற என்று நிரூப் கூறியதை கேட்டார்.

அப்போது நானெல்லாம் சிறுவயதில் பொம்பள பின்னாடி தான் ஒளிஞ்சுருக்கேன். யாராவது விருந்தாளி வந்தால் போதும் அம்மா பின்னாடி போய் ஒளிந்து கொள்வேன், வெட்கப்படாதே.. வெளியே வா என்பார்கள் என்று பட்டும் படாமல் நிரூப்பை விளாசினார்.

மேலும், ஒரு பெண் இந்திரா காந்தியாவதும் வேலு நாச்சியாராவதும் அவர் கையில் தான் இருக்கிறது என்ற கமல், பெண்ணை பெண் என்று சொல்லும் விதத்தில் தான் உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் வார்தையை அளந்து பேசுவதின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டேன் என்று கூறியும் ஹவுஸ்மேட்டுகளை மறைமுகமாக எச்சரித்தார். இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கைதட்டி வரவேற்றனர்.

Related Posts

Leave a Comment