மீண்டும் CWC-யில் நுழைய போகிறாரா சிவாங்கி..அவரே கூறியிருக்கும் தகவல்

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமடைந்த ரியாலிட்டி ஷோ Cook With Comali.

போட்டியாளர்களின் சமையல் கலையை வெளிப்படுத்துவதை மையமாக கொண்ட CWC சீசன் 1 தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அதிக வியூவர்ஸ்களை சம்பாதித்து பெரிதளவு பேசப்படும் நிகழ்ச்சியாக மாறியது.

இதற்கு முக்கிய காரணம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் குறும்பும் காமெடியும் கலந்த அணுகுமுறை தான்.

சீசன் 1-ன் வெற்றியை தொடர்ந்து 2-வது சீசனும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் பல்வேறு போட்டியாளர்கள் இன்று தமிழ் மக்களிடையே பிரபலமாகியுள்ளனர்.

அஸ்வின் குமார், சிவாங்கி, புகழ், பாலா, பவித்ரா ஆகியோருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிவாங்கி CWC சீசன் 3-ல் தன்னை எதிர்பார்க்கலாம் என ஜாலியாக கூறியிருக்கிறார். எனினும் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment