குக் வித் கோமாளி சீசன் 5.! செஃப் தாமுடன் கை கோர்த்த பிரபல நடிகர்!

by Lifestyle Editor

விஜய் டிவியில், பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து… டிஆர்பியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது ‘குக் வித் கோமாளி’ ஷோ தான். கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த இந்நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக கலகலப்பான நடுவர்களாக இருந்து, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் தான்.

எனவே விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியான உடனே… இந்த நிகழ்ச்சியில் அவர்களே நடுவர்களாக இருப்பார்கள் என்றும், இந்த முறை போட்டியில் களமிறங்கவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்களும் வெளியானது.

ஆனால் திடீர் என, வெங்கடேஷ் பட் இந்த தகவல் உண்மை இல்லை என்றும்… குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இவரை தொடர்ந்து செஃப் தாமு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் வெளியேறுவதாக அறிவித்ததால், ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 துவங்குமா? என்கிற சந்தேகம் எழுந்தது.

ஆனால் தற்போது மனம் மாறி செஃப் தாமு மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அதே போல் புது குழுவினர் இந்த தற்போது இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர். பல ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் தற்போது செஃப் தாமுவுக்கு பதில், புதிய நடுவர் களமிறங்கி உள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல, மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான செஃப் மதம்பட்டி ரங்கராஜன் தான். மிக குறுகிய காலத்தில், பல பிரபலங்கள் வீட்டில் சமையல் ஆர்டரை கை பற்றி கலக்கி வரும் இவர், தற்போது… விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார். ரசிகர்களும் சரியான தேர்வு என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக செஃப் தாமு… மதம்பட்டியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் போட்டியாளர்கள் பற்றிய விவரமும், இந்த முறை கோமாளிகளாக யார் யார் இருக்க போகின்றனர் என்கிற தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment