விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இதில் பல்வேறு துறையை சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அவர்களில் திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து அபிஷேக், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். மேலும் இந்த வாரம் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது முதலில் நடிகை ஷாலு ஷம்மு, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகரும், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.