வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மக்கள்: 1960ல் நடிகர் சிவாஜி கணேசன் வீட்டில் செய்த காரியம்!

by Column Editor

1960ம் ஆண்டு ஏற்பட்ட மழையின் காரணமாக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது வீட்டில் தன்னுடைய மேற்பார்வையில் மக்களுக்கு சமைத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது.

மழை என்று வந்துவிட்டாலே சென்னை முழுவதும் ஆறுகள், குளங்களாக மாறிவிடுகின்றது. ஆம் அந்த அளவிற்கு மனிதர்களின் இடுப்பிற்கு மேல் வரை தண்ணீர் தேங்குவதோடு, வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து அடிப்படை தேவைகளை கூட மற்றவர்கள் உதவியுடன் சந்திக்க நேரிடுகின்றது.

இந்நிலையில் தற்போது சில நாட்களாக சென்னையை புரட்டிப்போட்ட மழையினால், பல ஏரிகள், குளங்கள் நிரம்பியதோடு, செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்துவிடப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட மழையின் சேதத்தினால் முன் அறிவிப்பின்றி ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த அணைகள் திறந்துவிடப்பட்டதால் மக்கள் வெள்ளத்தில் மூழ்கினர். இவர்களின் உணவுத் தேவைக்கு கூட ஹெலிகப்டரில் சென்று உணவு வழங்கப்பட்டது.

தற்போது பெய்த மழையினால் அவதிப்படுபவர்களுக்கு, தன்னார்வலர்கள் உதவி வருவதோடு, மீட்பு பணியிலும் ஈடுபட்டு பல மக்களை பாதுகாத்து வருகின்றனர்.

மழையினால் குடியிருப்பு பகுதியில் கடல் போன்று காணப்படும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றியும் வருகின்றனர்.

இதே போன்ற பெருவெள்ளம், 1960ம் ஆண்டு சென்னையை சூழ்ந்த போது, மக்களின் பசி தீர்க்கும் பணியில் முதலில் இறங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.

மக்கள் ஒருவர் கூட பசி பட்டினியோடு இருக்க கூடாது என்று, மூன்று வேளையில் தன் வீட்டில் தன் மேற்பார்வையில் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைத்து மக்களுக்காக வழங்கினார்.

குறிப்பாக, 1960ல் மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்பும் வரை, சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டில் இருந்து சமைத்த உணவுகளே பல மக்களின் பசியை ஆற்றியது. அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment