பிக்பாஸிலிருந்து வெளியேறிய சுருதியின் முதல் சோகமான பதிவு

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய சுருதி தற்போது டுவிட்டரில் தனது முதல் பதிவினை பதிவிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றள்ளது. இதில் கலந்து கொண்ட திருநங்கை நமீதா தவிர்க்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
முதல் எவிக்ஷனாக நாடியாவும், இரண்டாவதாக அபிஷேக் ராஜாவும், மூன்றாவதாக சின்ன பொண்ணு வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரம் அபினய் வெளியேறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் எதிர்பாராத விதமாக சுருதி வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியேறுவதற்கு முன்பாக ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் தான் வைத்திருக்கும் தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார் சுருதி.
அதில் குறிப்பாக மதுமிதா மற்றும் பாவனி இருவரையும் மிஸ் செய்வதாக கூறினார். மேலும் வெளியில் வந்ததும் பாவனி மற்றும் நானும் ஒன்றாக வீடு எடுத்து தங்குவோம் என்று கூறியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவை பதிவிட்டு இருக்கும் சுருதி, பாவனி மற்றும் மது ஆகிய இருவரை மற்றும் குறிப்பிட்டு மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment